வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

விவாகரத்து

ஒரு அச்சடித்த தாழில் நீ போட்ட கையெழுத்து
விளையாடியது இன்று என் தலைஎழுத்தோடு
என் தாய் தந்தை உறவனைத்தும் விட்டு
நீயே என் உலகம் என்று உன்னுடன் வந்தேன்
உனை நம்பி வந்தவளை கைவிட்டுவிட்டாய்
நம் பாதை இனி வேறென்று புறப்பட்டுவிட்டாய்
உன்னுடைய நினைவுகளை மட்டுமே என் நெஞ்சில் சுமந்தேன்
அந்த நினைவுகளின் சின்னத்தை என் கருவில் சுமந்தேன்
கணவன் என்ற உறவு கனவாகி போனது
இன்று நான் காணும் பிரிவே நிலையாக ஆனது
நமக்கென்று நாம்கொண்ட திருமணத்தை நாடகமாக்கிவிட்டாய்
உனக்கென்று நான்கொண்ட ஒரு மனதை ரணம்செய்து சென்றுவிட்டாய்
துணை என்று நம்பி வந்தேன்; நீ தனி என்று கூறிவிட்டாய்
சொர்க்கத்தில் தொடங்கிய உறவை நரகத்தில் தள்ளிவிட்டாய்
அக்கினியின் அருந்ததியின் சாட்சியைத்தான் நீ மதிக்கவில்லை
உனக்குள்ளே உறைந்திருக்கும் உன் மனசாட்சி கூடவா இதற்கு உடந்தை?
போர்வாளினை விட கூரியது பேனாமுனை என்றுறைப்பார்கள்
உன்னோடு வாழ்ந்தபின் தான் அது உண்மை என்று உணர்கிறேன்!

- சாய்சுதா விவேகானந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக