நண்பா,
உன் முயற்சி எல்லாம் வீணாய் போகலாம்,
நீ செல்லும் பாதையும் மேடாக மாறலாம்,
வரவுக்கு மேலே செலவும் நீளலாம்,
சிரிப்பிழந்து உன் முகம் கூட வாடலாம்
கைக்கு எட்டியது வாய்க்கு கிட்டாமல் போகலாம்,
வெற்றி கூட உன் வாயிற் கதவை தட்டி ஓடலாம்,
இருப்பினும் தளராதே நண்பனே,
வெற்றி என்பது தோல்வியின் மறுபக்கம்
இருண்ட வீட்டின் பிணி போக்கும் அகல் விளக்கு
முயற்சியே அதனை நெருங்கச் செய்யும்
எட்டாத உயரத்திற்கு நம்மை ஏற்றி வைக்கும்.
நண்பா,
தோல்வியால் தளர்ச்சி வரலாம்
ஓய்வெடுத்த பின் மீண்டும் முயற்சி செய்
சிகரம் கூட பணிந்து உன்னை ஏற்கும்
அலை கடலும் ஆழிப்பேரலையாய் எழுந்து உன்னை வாழ்த்தும்.
- ந.மகாராஜன்
வியாழன், 6 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக