ஊருக்கே நிழல் தந்த ஆலமரம் கூட
இன்று போன்சாய் மரமாய் வீட்டு வரவேற்பரையில்;
ஆண்களே இல்லாமல் குழந்தையும் உருவாகும்
வெறும் பெண்ணின் தசையால் இந்த குளோனிங் யுகத்தினிலே;
அனுவையும் பிளந்து வெடிகுண்டாய் மாற்றி
விஞ்ஞானப் புரட்சி என ஒரு நாட்டை அழித்தோம்;
தொழில்வளம் காண்போமென மார் தட்டி சூளுரைத்து
கனிமவளம் தேடி பல காட்டை அழித்தோம்;
நான் பார்த்து வளர்ந்த சிட்டு குருவிகள் கூட
இன்று கால மாற்றத்தால் காலச் சுவடியாய்!
இருக்க இடமும், உண்ண உணவும் கொடையாய் தந்து
நம்மை வாழ வைத்த பூமியை சீண்டலானோம்,
அதன் வளங்களை சுரண்டலானோம்;
மறவாதே மனிதனே,
உன் இனத்திற்கு வயது வெறும் இருபது லட்சமே,
நீ இல்லாமலும் பூமி இருந்த்துண்டு,
இப்பூமி இன்றி நீயோ சாத்தியமில்லை;
இயற்க்கையோடு ஒன்றி வாழ பழகிடுவோம்;
நம் சந்ததிக்கு தூய பூமி விட்டு வைப்போம்.
- ந.மகாராஜன்
வியாழன், 6 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக