திங்கள், 10 ஆகஸ்ட், 2009

வாழ்க்கை வாழ்வதற்கே

விவரமறியா மழலையில் ஓட்டம்
உடம்பது தளரா மகிழ்வது கூடி;
இடுக்கன் இல்லா பள்ளியில் ஓட்டம்
மதிப்பென் தேடி மதியது சிறக்க;
விடையது தெரியா விடலையில் ஓட்டம்
கனவினில் மிதந்து காதலில் ஜெயிக்க;
வலியது நெளியும் வாலிபனாய் ஓட்டம்
பணத்தினை தேடி வாழ்வது சிறக்க;
பொருப்பு மிகுந்த தந்தையாய் ஓட்டம்
குழந்தைகள் வாழ்வு குறையின்றி அமைய;
வயோதிகம் வந்ததும் நின்றது ஓட்டம்
உடலும் உள்ளமும் ஓட மறுத்ததால்!
திரும்பிப் பார்க்கையில் நாளை நினைத்து
இன்றது மறந்தேன்!
இன்றோ நாளை இருக்குமோ என்றது அறியேன்
ஆனால் இன்றோ நேற்றைய நினைவு!

- ந.மகாராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக