வியாழன், 13 ஆகஸ்ட், 2009

கனவுகள்

வாடிய பயிர் கண்டு வாடிடும் மனம் கொண்ட
தலைவர்கள் இங்கு பிறந்திட வேண்டும்;
கன்றது கொன்றிட்ட மகன் அவன் தேரடி சேர்திடும்
அறம் இங்கு வளர்ந்திட வேண்டும்;
காதியை அணிந்திங்கு காந்தியம் மறந்திட்ட
தலைவர்கள் நாட்டினில் ஒழிந்திட வேண்டும்;
பொருளது பார்க்காமல் உயிரது காத்திடும்
அறிவியல் வளம் இங்கு பெருகிடல் வேண்டும்;
மதமின்றி மனிதர்கள் சமதர்மம் பேசிடும்
சமத்துவ கொள்கைகள் சீர் பட வேண்டும்;
கனவதை நினைவாக்கும் நெஞ்சுறம் நிறைந்திட்ட
இளைஞர்கள் அடையாளம் கண்டிடல் வேண்டும்;
கண்டிடும் இளைஞனை இரு கரம் பற்றியே
அரசியல் களம் காண அழைத்திடல் வேண்டும்;
அரசியல் அவனது கால் பட்டு கங்கையாய்
மாறிடும் அதிசயம் நிகழ்ந்திட வேண்டும்;
நிகழ்ந்திடும் மாற்றத்தால் அன்பும் அமைதியும்
எட்டுத்திக்கும் பரவிட வேண்டும்.

- ந.மகாராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக