
சுதந்திர தினத்தன்று ஊரெங்கும் வந்தே மாதரம் ஒலி !!!
மேடைகளில் வல்லரசாய் மாற்றுவோம் என்று இன்றைய தலைவர்களின் பேச்சு ஒலி !!!
யாரும் கேட்டறியா அந்த பிஞ்சு குழந்தைகளின் கதறல் ஒலி !!!
என்று கேட்குமோ பாலியல் கொடுமை இல்லா நாடு வேண்டிடும் ஒலி !!!
இந்த குழந்தையின் சுதந்திர தாகத்திற்காக எழுப்புவோம் நம் ஒலி !!!
விரைவில் எழட்டும் அவர்களின் மழலை சிரிப்போலி !!!
- செ.செந்தில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக