கவி எழுத தொடங்கினேன் நீயோ காவியம் ஆனாய்
சிதைக்கத் தொடங்கினேன் நீயோ யௌவன சிற்பமானாய்
கிறுக்கி வைத்தேன் நீ கலைமிகு சித்திரம் ஆனாய்
விதைத்து வைத்தேன் நீ இறும்பூது விருட்சமானாய்
கோபத்தில் குமுறும் போது குளிர்விக்கும் தென்றல் ஆனாய்
வேதனையில் வெடிக்கும் போது ஆற்றுவிக்கும் அபயமானாய்
தனிமையில் வாடினேன் நீ உடனிகழும் துனை ஆனாய்
நான் தவறிழைத்தேன், அதை உணர்த்தும் ஊசி ஆனாய்
எண்ணமே உன்னை எடுத்தெறிந்தேன், ஏளனம் செய்தேன்
புறக்கணித்தேன் வெறுப்பினை உமிழ்ந்தேன் -அலுப்பு கூடி
உறங்கிப் போனேன் - நீயோ கனவினிலும் காட்சியாய் விரிந்தாய்.
-ந.மகாராஜன்
திங்கள், 31 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக