வரதட்சணை வேண்டாம் என்றால்,
குறை உண்டோ உனக்கு என்று
கூசாது கூறும் அறிவிளி கூட்டம் உண்டு.
அரசாங்கம் என்ன சொல்லும்,
என் பணம் நான் கொடுத்தால் என்று,
அசராமல் பதில் சொல்லும் அதிகார கூட்டம் உண்டு.
பெண் பெற்ற பாவத்திற்கு வாய் கட்டி வயிற்றை கட்டி,
கறை சேர்க்க வேண்டும் என்ற
உன் சிறப்பு அறியா கூட்டம் உண்டு.
வழி இல்லை என்று சொல்லி - வறுமையால்
வாடி தானே, அறளியை தேடிச் செல்லும்
முதிர் கன்னி இன்றும் உண்டு.
மணம் செய்யும் ஆணுக்கு, நீ எவ்விதத்தில் குறைச்சல் அடி
சம உரிமை வேண்டும் பெண்னே
நீ சிந்தித்துப் பார்பாயோடி.
மணம் செய்ய வந்த நானோ காட்சிப் பொருள் இல்லையடி
திருமன சந்தையில் என்னை,
விலை பேசி விற்கின்றீரே;
வேதனை தான் மிச்சமடி உனை எண்ணி நான் பார்க்கையிலே
வரதட்சனை கொடுக்க மாட்டேன் என்று,
நீ சபதம் என்று செய்வாயோடி;
- ந.மகாராஜன்
வெள்ளி, 31 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
super!!!!!!
பதிலளிநீக்குthanks mann
பதிலளிநீக்கு