வியாழன், 19 நவம்பர், 2009

சென்னையில் மழை

கருமேகம் மலர் தூவ
ஓடும் ரயில் இசை பாட;
சாரல் என்னைத் தீண்டிச் செல்ல
தென்றல் என்னை முத்தமிட;
நிற்காமல் ஓடும் நீரும்
புல் நுனியில் மின்னும் மணியும்
இணைந்து என்னை குதூகலிக்க;
துள்ளலாய் ரயில் விட்டு இறங்கி
பரவச மிகுதியால் பாடல் முனுமுனுத்து
சில்லென்ற காற்றை சிலாகித்து ரசித்து;
வீதி வந்த போது சுறீல் என வலித்தது,
தலை மேலே தார்பாய் இழுத்து பிடித்து
அமர்ந்து இருந்த சாலையோர சிறார்களை கண்டு.

- ந.மகாராஜன்

2 கருத்துகள்:

  1. இது உன்னை போன்றவர்கள் அரசியலில் இல்லாததன் மற்றும் வராததன் குற்றம்

    பதிலளிநீக்கு
  2. finger pointing...ha ha.....naan mattum illa thalaivareh neengalum...ellarum varanum.....

    பதிலளிநீக்கு