சனி, 21 நவம்பர், 2009

மறந்த கடமைகள்

அழுகையோடு பிறந்தேன்
எனை ஆசுவாசப்படுத்தியது
உறவுகளின் மகிழ்ச்சியொலி;
பள்ளி கண்டு பயந்தேன்
எனக்கு தைரியம் அளித்தது
நண்பர்களின் கூட்டு;
விளையாடும் போது விழுந்தேன்
கைத்தட்டி ஊக்கப்படுத்தியது
தெரியாத கரங்கள்
சபை கண்டு திணறி நின்றேன்
தண்ணீர் தந்து சாந்தப்படுத்தியது
அறியாத முகங்கள்
உறவுகள், நண்பர்கள், தெரியாத கரங்கள்,
அறியாத முகங்கள் தேவைப்பட்டது
நான் வளரும் வரை!
வளர்ந்த பின், தானாய் வளர்ந்த
இருமாப்போடு, தன்னலம் மிஞ்சி
தனியாய் நிற்கிறேன்
சமுதாய கடமை மறந்து

- ந.மகாராஜன்

1 கருத்து:

  1. அருமை!
    எழுத்துப் பிழைகள் களைந்தால் மிக அருமையாக வந்திருக்கும்.

    இருமாப்பு அல்ல இறுமாப்பு..(தவறுகள் திருத்தப்படுவது தவறல்லவே..)

    பதிலளிநீக்கு