காதலித்துப் பார். இதை முதன் முதலில் நான் கேட்ட போது, என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு வார்த்தையாய் இருந்தது. காதல், என்பதை ஒரு ஆணும் பெண்னும் தங்களுக்கு உள் கொண்ட வெறும் ஈர்ப்பாக எண்ணி இருந்தேன். பிற்பாடு அந்த சொல் என்னில் ஏற்படுத்திய தாக்கம், அது ஏவ்வளவு அழகான உணர்வு பூர்வமான ஒரு வார்த்தை என்பதை எனக்கு உணர்த்தியது. காதல் என்னை எனக்கே உணர்த்திய மந்திரச்சொல். காதல் என்பது ஒரு விசயத்தின் மீது ஒருவருக்கு உள்ள அபரிமிதமான அன்பு. நாம் செலுத்தும் அன்பிற்கு எதிர்பார்க்கும் பிரதி பலன், காதல் அல்ல வெறும் வியாபாரம். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி ஒரு விசயத்தின் மீது நமக்கு அபரிமிதமாக ஏற்படும் அன்பே காதல். இன்று சமூகத்தில் பரவலாக அடிபடும் செய்தி, காதல் தோல்வியால் மரணம். காதலும் தோல்வியில் முடியுமா என்று எனக்கு பெருத்த ஐயப்பாடு. அமர்ந்து சிந்திக்கலானேன். காதல் என்ன ஓடப்பந்தயமா வெற்றி பெற்றவன் இவன், தோல்வி அடைந்தவன் இவன் என்பதை வரையறுத்துக் கூறுவதற்கு.
காதல் என்பது முதலில், ஆர்வத்தில் உண்டாகிறது, ஆசையில் வளர்கிறது, முயற்சியாய் எழுகிறது, நம்பிக்கையாய் மனதில் பதிகிறது. First it is comes out of curiosity to know, desire to attain, willingness to achieve and then turns out to an undisputable belief. கடவுள் இருக்கு, இல்லை, என்று பலவித நம்பிக்கைகள் இருக்கு. ஆனால் அந்த நம்பிக்கை மேலும் மேலும் வளருமே ஒழிய, தேய்வது கிடையாது. மனிதர்கள் மாறலாம், அவர்கள் நம்பிக்கைகள் மாறலாம், ஆனால் அந்த மார்கம் நிலைத்து இருக்கும். அது தான் காதல். எனக்கு காதலின் தாக்கம் ஏற்பட்டது எப்போது, நினைத்துப்பார்கிறேன், நினைவை பின்னோக்கி செலுத்திப் பார்கிறேன். விடையறிய இயலவில்லை. காந்தியம் பயில நான் தொடங்கிய நாள் முதலா, இல்லை, நான் சைவனாய் மாறிய நாள் முதலாய், இல்லை. கல்லூரிக்கால நாட்களிலா, தெரியவில்லை. இதை நான் எழுத அவசியம் இல்லை தான். இது ஒரு வகையான சுய தேடல். இது என் அனுபவங்களில் நான் காதல் உணர்ந்த நேரத்திற்கான ஒரு தேடல். நம் ஒவ்வொருவர் உள்ளும் ஒளிந்து இருக்கும் காதலை நாம் உணர தவறி விடுகிறோம். அதை நாம் எப்போது உணர்கிறோம் என்பதைக் கூட நாம் உணர தவறியதாய் உணர்ந்தேன்.
பள்ளியில் படிக்கையிலே நான் முதல் முதலாய் எழுதிய கவிதை என் பழைய டைரியில் பார்க்க முடிந்தது.
நான் தமிழின் மீது கொண்டது காதல்
தாய் நாட்டின் மீது கொண்டது காதல்
பெற்றோர் மீது கொண்டது காதல்
குருவின் மீது கொண்டது காதல்
காதல் பெண்னை பார்த்து வருவதில்லை
வயதிற்கேற்ப வருவதில்லை
உண்மையான அன்பின் ஊடே
உயர்ந்து நிற்பது காதல் தானே.
இதை நான் எப்போது எழுதினேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. அன்பு பாராட்டும் மனம் அப்போதே அடி மனதில் நிறைந்து இருந்தது போலும், உணர முடியவில்லை. சிறு வயதில் ஒடுவன, பறப்பன என எதையும் தயவு தாட்சன்யம் இன்றி உண்டது, என் நினைவில் இன்றும் உண்டு. ஆனால் எப்போது என் உயிரின் பிரதிபலிப்பை என்னால் இன்னொரு உயிரில் காண விழைந்தேனோ அன்று முதல் என்னால் அவற்றை உண்ண முடியவில்லை. நான் உயிர் வாழ இன்னொரு உயிரை கொல்ல என் மனம் விடாப்பிடியாய் மறுத்தது. காதலின் பாதிப்போ இது? இருக்கலாம். ஆனால் அந்த உணர்வு தோன்றியது மட்டும் உண்மை.
ஒருமுறை வேலை நிமித்தமாய் மராட்டிய மாநிலத்தில் உள்ள கோலாபூருக்குச் சென்றிருந்தேன். அங்கு அருகில் இருக்கும் இடங்களை சுற்றிப் பார்க்க ஆசை பட்டு அரசு பேருந்தில் தனியாய், என் பயனம் தொடங்கினேன். மராட்டிய மொழி, அறிய வில்லை நான். இந்தியும் தகராறு தான். நாத்திகம் பழகினாலும், கோவில்களை பார்க்கும் ஆர்வத்தினால், சென்று திரும்பிக் கொண்டு இருந்தேன். கையில் பிரசாதமாய், அவர்கள் ஊர் இனிப்பு உருண்டை இருந்தது. பையில் 500 ருபாய் நோட்டை தவிர வேறு பணம் இல்லை. என் முன்னிருக்கையில் விவசாய கூலி செய்து திரும்பும் இரண்டு சிறுமிகள், தூக்கு சட்டியுடன் அமர்ந்து இருந்தனர். ஒரே சிரிப்பும் கும்மாளமுமாய் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு 8 முதல் 10 வயது தான் இருக்கும். மிகச் சாதாரன உடையில் அவர்களது ஏழ்மை தெரிந்தது. நடத்துனர் என் அருகில் வந்து சீட்டு கேட்டார். பையில் இருந்த நோட்டை எடுத்து நீட்டினேன். என்னை மேலும் கீழுமாய் பார்த்தார். மராட்டியத்தில் சில்லறை இல்லை என்றார். எனக்குப் புரிந்தது. பரவாயில்லை, கடைசி நிறுத்ததில் வாங்கிக் கொள்வதாய் கூறினேன், அறைகுறை இந்தியில். மொத்தமே அவ்வளவு சேராது என்றார். நான் சங்கட்த்தில் கையை பிசைந்தேன். என்னை இறங்க் சொன்னார். தெரியாத ஊர், புரியாத பாஷை. கடைசி இறக்கத்தில் இறங்கிய உடன் மாற்றித் தருமாறு கூறினேன். அவர் கேட்பதாய் இல்லை. முன்னே அமர்ந்து இருந்த சிறுமிகள் திரும்பி நடத்துனரிடம், அண்ணாவை ஏன் இறங்கச்சொல்வதாய் கேட்டார்கள். அவர்கள் பேசியது பெரும்பாலானவை எனக்கு புரிய வில்லை. எனக்காக வக்காலத்து வாங்குவது தெரிந்தது. என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது மட்டும் தெரியவில்லை. இறுதியில் எனக்கான பயனச்சீட்டை அவர்கள் காசு கொடுத்து வாங்கி என் கையில் திணித்தனர். செய்வது அறியாது திகைத்து நின்றேன் நான். இறங்கிய உடன் மாற்றி தருவதாய் சொன்னேன், சிரித்தார்கள். இன்னும் மழலை மாறவில்லை அவர்களிடம். பிரசாதம் அளித்தேன், மறுத்தார்கள், கையில் தினித்தேன். மழலைக்கான் ஆர்வத்துடன் அதை உண்டு ரசித்தார்கள். 8 ரூபாய் 50 காசுகள், நமக்கு மிகச்சிறிய பணம் தான். எத்தனை பேர் பேருந்தில் பயனிக்கும் போது சக பயணிக்கு கொடுத்து உதவி இருக்கிறோம். நம் ஒரு நாள் வருமானத்தில் அது ஒரு மிகச்சிறிய ஒரு எண்ணிக்கை. விவசாய கூலிகலான அந்த சிறுமிகளுக்கு இது மிகப்பெரிய தொகை. என்னை இதற்கு முன்பு அவர்கள் பார்த்தது இல்லை. மீண்டும் பார்க்கும் வாய்ப்பும் குறைவு. எதை எதிர்பார்த்து செய்யப்பட்ட உதவி இது, சிந்திக்கையில் கடைசி நிறுத்தம் வந்தது. இறங்கி ஓடினேன் சில்லறை மாற்ற. வரும் போது அவர்கள் மறைந்து இருந்தனர். அவர்கள் போன இடம் தெரியவில்லை. எழைகள், விவசாய கூலிகளாய் நான் நினைத்து இருந்தவர்கள் என் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சிம்மாசன்ம் இட்டு அமர்ந்த தினம் அது.
எந்த பலனும் எதிர் பார்க்காமல் எத்தனை பேருக்கு உதவிகள் செய்து இருக்கிறோம். ஒருவர் செய்யும் உதவியை கூட, இந்த உதவி இந்த உள்நோக்கத்துடன் தான் செய்யப்பட்டு இருக்குமோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு நம் உள்ளம் மறத்து இருக்கிறதோ. விடை சொல்ல நான் யாரும் இல்லை. இது என்னை நான் கேட்ட கேள்வி. எதையும் எதிர்பார்க்காமல் எனக்கு பணம் கொடுத்தவர்கள் கையில், அந்த 500 ரூபாய் பணம் கொடுக்கும் மனம் எனக்கு இல்லாமல் போனதே. அந்த நோடியில் அது எனக்கு பெரியதாய் தெரிந்ததோ? அவர்கள் கையில் கொடுத்து மாற்றச் சொல்லி இருக்கலாமோ? இல்லை அவர்கள் நேர்மைக்குப் பரிசாய் அதை கொடுத்தால், தூ நீ இவ்வளவு தானா இன்று அவர்கள் எண்ணி விடுவார்களோ என்ற நினைத்து என்னால் அவ்ர்களிடம் தர முடிய வில்லையோ? அந்த நேரத்தில் நடைபெற்ற சிந்தனை ஓட்டத்தை என்னால் மீண்டும் இழுத்து வர முடிய வில்லை. ஆனால் அமர்ந்து சிந்திக்கையிலே இதுவள்ளவோ காதலின் நிலை, என்பதை உணர முடிந்தது.
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லால்
வேறொன்றறியேன் பராபரமே."
அனைவரும் இன்புற்று இருக்க வேண்டும் என்பதை தவிர நான் வேறொன்றை அறிந்து இருக்கவில்லையே பராபரமே என்கிறார் தாயுமானவர். ஆம் அனைவரும் இன்பமாய் இருக்க வேண்டும் என்ற உணர்வு தான் காதல். மனிதனை மனிதனாய் நேசித்த அந்த மழலை உள்ளங்கள் உணர்த்திய செய்தி இது. காதல் பொருள் சார்ந்த விஷயம் இல்லை. உணர்வு சார்ந்ததே. காதலிக்க பகைமை பாராட்டாத மனம் ஒன்று போதுமே ஒழிய, வேறென்ன வேண்டும். அனைத்தையும் காதலிக்க முடியும், மடைத்திறந்த வெள்ளம் போல.
அனைத்தையும் காதலிப்பது எப்படி சாத்தியம் ஆகும்? திடீரென எப்படி தோன்றும் காதல்? காதல கொண்டவர்கள் உணவு, உறக்கம் வெறுப்பது எப்படி சாத்தியம்? இவ்வாறு பல கேள்விகள் என்னை துளைத்து எடுத்தது. அனைத்தையும் காதலிப்பது சாத்தியமே. அனைவருக்கும் சாத்தியமா என்பது அவர் அவர் மனதை பொறுத்தது. ஆனால் பார்க்கும் பொருளை எல்லாம் கண்டு காதல் வசம் கொண்ட மனிதர்கள், வாழ்ந்தது உண்டு.
வாடிய பயிர் கண்டு வாடினார் வள்ளலார். ஜீவகாருண்யத்தை நிலை நிறுத்தினார். பயிர் கண்டு வாடுவது சாத்தியம் ஆனது எப்படி? காக்கை, குருவி எங்கள் சாதி என்றார் பாரதி. அனைத்து உயிரையும் ஒன்றாய் பார்க்கும் மனோபாவம் அவருக்கு எப்படி வந்தது? அவருக்கு உலகமே அவரது ஏழ்மையிலும் அழ்கானதாய் தெரிந்தது. எந்த ஒரு பெண்னையும் காதலிக்கும் எவரையும் கேளுங்கள் பல வண்ணப் பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப் பறப்பதை உணர்வதாய் கூறுவர். பைத்தியக்காரத்தனமாய் தோன்றும். இது எப்படி சாத்தியமாகும் என்பதாய் தோன்றும். காதலித்துப் பார். சாத்தியமாகும். உணவை மறந்து, தூக்கம் மறந்து Einstien பல நாட்கள் ஆராய்ச்சிக் கூடத்தில் செலவழித்தது பதிவுகளில் உண்டு. அறிவியல் மீது அவர் கொண்டு இருந்த காதலின் வெளிப்பாடு அது.
காதல் என்பதும் ஒரு உணர்வு தான். பக்தி போன்றது. அது தோன்றுவது இல்லை, அங்கேயே தான் இருக்கிறது. நாம் அதை தேடி செல்லும் போது புலப்படுகிறது. Love is like a form of Energy, neither be created nor be destroyed. But it gets transformed from one form to another. வாழ்வின் அடிப்படை காதல், இந்த உலகம் இயங்க காரணமும் காதல் தான். உலகின் அனைத்து மதங்களின் அடிப்படையும் அன்பு பாராட்டுவதே. அபரிமிதமான அன்பு பாராட்டுதலே காதல்.
நாச்சியார் திருமொழியில் உள்ள ஒரு பாடல்,
வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடர்வக் கென்று பேச்சுப் படில்
வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே
"என் மார்பகங்கள் திருமாலுக்கேயன்றி மனிதர்களுக்கு அல்ல" என்று கூறும் ஆண்டாள் தன்னிலை மறந்தவளா? கடவுளை கண்டவளா? அல்லது தானே கடவுள் என்ற அகங்காரம் பிடித்தவளா? இல்லை பக்தி மிகுதியில் கடவுளையே காதலித்தவள்.
பழைய ஏற்பாட்டில் ஒரு கதை வரும். கடவுள் ஏன் தன்னிடம் மட்டும் பேசுகிறார், என்று Moses க்கு சந்தேகம் வந்தது. கடவுளிடமே கேட்டான். நீங்கள் ஏன் என்னிடம் மட்டும் பேசுகிறீர்கள்? என்று. அதற்கு கடவுள் அளித்த பதில். நான் எல்லோரிடமும் தான் பேசுகிறேன். என் குரலை காது கொடுத்துக் கேட்டவன் நீ ஒருவன் மட்டுமே என்று. இது போல் தான் காதலும். இன்றைய உலகில், வேக வேகமாய் பயனித்துக் கொண்டு இருக்கும் எத்தனை பேர், நம் மனம் கூறும் சேதிக்கு செவி கொடுத்து இருக்கிறோம். கொஞ்சம் நிதானித்து கூர்ந்து கேட்டுப் பார்த்தால், யாருக்குத் தெரியும் நம் ஒவ்வொருவர் உள்ளும் ஒரு டா வின்சி, தாகூர், காந்தி, கலாம் யார் வேண்டுமானாலும் ஒளிந்து இருக்கலாம். காதலின் குரலை நாம் கேட்பது தான் இல்லை. காதலித்துப் பார், ஒரு பெண்னை, பொருளை, பெற்றோரை, தாய் நாட்டை, பதவியை, பூமியை, இயற்க்கையை, எதையாவது ஒன்றய் காதலித்துப் பார். கண் முன்னே உலகம் விரியும். நம் மீதே நமக்கு நம்பிக்கை பிறக்கும். சாதனைகள் செய்திட மனது துடிக்கும். காதலிக்காக, பெற்றோருக்காக, தாய் நாட்டிற்காக நாம் காதலிக்கும் எதற்காகவும் எதையும் செய்திட ஆக்க சக்தி பிறக்கும். போரில்லா, தூய, பூமியில், ஒருவர் மற்றொருவரை நம்பி சேர்ந்து வாழ்ந்திடும் நிலையை எண்ணிப்பாருங்கள். நாம் வாழும் போது சிதைக்கிறோம், பூமியை, தேசத்தை எதையும் விடாமல். ஆனால் வாழும் போது விதைக்க அல்லவா வேண்டும். நம் சிந்தனைகளை. காதலித்துப் பார், நான் சொன்ன வார்த்தைகளின் உண்மை புரியும். சாதனைகளின் தூரமும் குறையும். நான் சாதித்தது என்ன என்ற குதர்க்க கேள்வி வேண்டாம் Please. சாதிக்க இன்னும் நாளிருக்கிறது, அந்த நம்பிக்கையை எனக்கு என் காதல் அளித்து இருக்கிறது. அது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் வேண்டாம் Please. அதை தெரிந்து கொள்ள காதலித்துப் பார். முடிப்பதற்கு முன்பு நான் மிகவும் ரசித்த கவிதை ஒன்று
இல்லாமல் போக இப்போதும் மனம் இல்லை,
நூறாண்டு வாழ்ந்துவிட்ட போதும்,
கொஞ்சம் நேசம், அனேகம் துரோகங்கள்,
கொஞ்சம் செல்வம், அனேகம் கடன் சுமைகள்,
எனினும் பூக்களின் புன்னகை, மரங்களின் ஸ்னேகம்,
பறவைகளின் சங்கீதம்,
எனவே தான்...............(இல்லாமல் போக இப்போதும் மனமில்லை)
வியாழன், 22 அக்டோபர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
simply too good maha!!keep writing more like this..it will help rediscover ourselves
பதிலளிநீக்குAnu
You are writing like a matured writer man...Great..You have answered all the questions i had about LOVE...
பதிலளிநீக்குGood work ...keep going...
பதிலளிநீக்கு@ anu: Thanks for your comments anu. Very happy to see u here
பதிலளிநீக்கு@saravanan....thanks for ur support mann....ill continue to write with ur support....
பதிலளிநீக்கு@siva thanks for reading anna
பதிலளிநீக்குAnbulla Maharajanukku,
பதிலளிநீக்குUnnul Niraya Pudhayal Erukirathu enru enaku theriyum .
Adhil Onrai entha Katturayil Parkiren.
Melum Pala Elutha Vendum Enbadhu en aasai......
Un Katturaiyai Nijamaga "Kadhalikiren".
Endrendrum Anbudan
Mari
mika nandri anna ungal karuthuku.....MElum ezutha muyarckiren anna....ungal aAtharavudan.
பதிலளிநீக்குi think u r ready for the next level... u know what I mean...I am watching you for the last 4 - 5 yrs... from whatever the dicussions(Actually which wil end up as a fight) we had before and the discussions you do in your blog now, when I compare this I find that your literary sense has multiplied a lot, infact exponentially increased.. thaks to Saudi king for all his restrictions so now you are thinking only what you want to think!!! ;) u options are unlimited... explore all options..!! you know what I mean again!! ;)
பதிலளிநீக்கு@radhakrishnan: anna thanks for reading anna. To be frank i am rather surprised by the response for the article anna. ya the discussions that we have on communism, capitalism, socialism all those things that end up in the fight, did increase my literary sense. Ha ha, its not the restrictions by saudi king that made this, i used to think the same, only that my way of expressing it has rather changed, u can say. Ya i do understand wat u mean, hope all that happens.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குits excellent :) seriously superb...
பதிலளிநீக்குnice one maha!! too good!! keep writing such articles!
பதிலளிநீக்கு@ thanks for reading the article rams.....keep reading just for a supoort....:)
பதிலளிநீக்குஅண்ணா..! இத்தனை நாட்கள் இணையத்தில் பொழுதைக் கழித்துவிட்டு, இன்றைக்காவது இது போன்ற ஒரு கட்டுரைக்கு வாசகனாய் மாறியமைக்கு உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன்..!
பதிலளிநீக்குkaruthukum ookathirkum mikka nandri
பதிலளிநீக்கு